அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் நான்கு கோடியே நாற்பது லட்சம் (44 மில்லியன்) வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன் தினம் மாத்திரம் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், சாரதிகள் வாகனத்தை சரிபார்த்து நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்துவதற்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே நெடுஞ்சாலைகளுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு அதிவேக வீதியின் வெளியேறும் வாயில்களில் இன்று (14) வாகன நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதால், வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.