ஈரானிற்கு எதிராக அனைத்து தடைகளையும் விதிக்கவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் இஸ்ரேலின் பிரதிநிதி ஜிலாட் எர்டான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இன்னும் தாமதமாவதற்கு முன்னர் ஈரானிற்கு எதிராக அனைத்து தடைகளையும் விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்துள்ளார்.
வின்ஸ்டன் சேர்ச்சில் போன்றவர்கள் தலைமை தாங்கும் உலகமே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள ஈரானின் இராஜதந்திரி அமீர் சையிட் தனது நாடு மேற்கொண்ட இந்த நடவடிக்கை தற்போது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபடும் நோக்கம் இல்லை ஆனால் அமெரிக்கா இராணுவரீதியில் செயற்பட்டால் ஈரான் உரியஅளவிலான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.