விநாயகரின் உருவத்தையே கிழக்கில் கோபுரமாக கொண்டுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலய கொடியேற்ற நிகழ்வு நேற்றுமுன்தினம் (14) சித்திரை புதுவருட நாளில் இடம்பெற்றது.
செட்டிபாளையம் சித்தி விநாயார் ஆலயத்திலிருந்து யானை மீது கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
இதன் போது அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் எதிர்வரும் 22 ஆம் திகதி தேரோட்டம் இடம்பெற்று 23 ஆம் திகதி தீர்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நிறைவு பெறவுள்ளது.
அத்துடன் கிரியைகள் யாவும் சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் குறித்த கொடியேற்ற நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.