குட்டிமணி தங்கதுரை பிடிபடும் வரையில் பிரபாகரன் ரெலோ கட்சியில் தான் இருந்தார் என கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, 1981.04.05 அன்று குட்டிமணி தங்கதுரை அவர்கள் பிடிபடும் வரை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவருடனேயே இணைந்து செயற்பட்டார்.
மேலும் இவ்விடயம் குறித்து எனது கருத்தை கேட்கும் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கலாம். ஆனால் இதுவே உண்மை என வெளிப்படையாக கூறினார்.
மேலும் இலங்கையில் இருக்கும் அதிகாரிகளும் சரி, சிங்கள பௌத்த பேரினவாதிகளும் சரி அடக்கு முறைகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் பேரினவாத செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களும் துணைபோகின்றார். இந்த நிலைமையை பார்க்கும் பொழுது இலங்கையில் தமிழ் மக்கள் எப்படி வாழ முடியும் என்ற கேள்வியே எழுகிறது. – என்றார்.