விண்வெளியில் பால்வீதியில் (Milky Way) ஒரு புதிய உறங்கும் ராட்சத கருந்துளை (Sleeping giant black hole) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது விண்மீன் மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருத்துகளில் மிகப்பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது கிரகத்தில் இருந்து இரண்டாயிரம் ஒளியாண்டுகளுக்கும் குறைவான தொலைவில் உள்ள அக்விலா விண்மீன் தொகுப்பில் தூங்கும் ராட்சத கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சூரியனை விட கிட்டத்தட்ட 33 மடங்கு எடை கொண்டது. மேலும், பால்வீதியில் இவ்வாறான பாரிய நட்சத்திர தோற்றம் கொண்ட கருந்துளை கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கருந்துளைகள் மிகவும் தொலைதூர விண்மீன் திரள்களில் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூங்கும் ராட்சத கருந்துளை, பாரிய நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் வளர்கின்றன என்பது பற்றிய அறிவியல் கருத்துக்களை சவாலுக்குட்படுத்தியுள்ளது.
கருந்துளையில், பொருகள் மிகவும் அடர்த்தியாக நிரம்பியுள்ளது. அதன் மகத்தான ஈர்ப்பு விசையிலிருந்து ஒளி கூட தப்பிக்க முடியாது.
சில நேரங்களில், கருந்துளைகளில் எந்த நட்சத்திரங்களும் நெருக்கமாக இருக்காது. அவை எந்த ஒளியையும் உருவாக்காது. அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம்.
வானியலாளர்கள் இந்த கருந்துளைகளை “dormant” என அழைக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாத “dormant” கருந்துளை அதற்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்களின் இயக்கத்தை பாதிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.