2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் மொபைல் போன் விற்பனை 10% குறைந்துள்ளதால் உலக ஸ்மார்ட்போன் சந்தையில் மகுடத்தை அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் இழந்துள்ளது .
தற்போது அந்த முதல் இடத்தை ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான தென் கொரியாவின் சம்சுங் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .
2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 20.8 % பங்கினை பெற்று சம்சுங் நிறுவனம் விற்பனை ரீதியாக முன்னிலையை பெற்றுக் கொண்டுள்ளது
மொத்த விற்பனையில் 17.3% பங்கினை பெற்று ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு விற்பனை ரீதியாக தள்ளப்பட்டுள்ளது .
14.1% பங்கினை சீனாவின் சியோமி மொபைல் நிறுவனம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது .
2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் சம்சுங் நிறுவனம் 60 மில்லியன் மொபைல்களையும் , ஆப்பிள் நிறுவனம் 50.1 மில்லியன் மொபைல்களையும் வெளியிட்டுள்ளது .