கனடாவுக்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற் பகுதி வரையில் பெருந்தொகையான இலங்கையர்கள் கனடாவுக்கு விருந்தினர் விசாவில் சென்றுள்ளனர்.
எனினும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் விருந்தினர் விசாவில் செல்வோரின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் விருந்தினர் விசா தொடர்பில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் ஏற்கனவே கனடா சென்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் புதிதாகச்செல்ல தமிழர்கள் அச்சப்படுகின்றனர். கனடாவில் வேலைவாய்ப்பின்மை, வாடகை வீடுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன இவற்றில் முக்கியமானவையாகும். பல கோடிகளைச் செலவு செய்து கனடா சென்ற தமிழர்கள் அங்கு வாழ முடியாது என்பதை உணர்ந்த நிலையில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.