Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தர் தேடிக்கொண்டிருந்தது இயேசுவையே; மத போதகரின் கருத்து தொடர்பில் உத்தரவிட்ட ஜனாதிபதி!

புத்தர் தேடிக்கொண்டிருந்தது இயேசுவையே; மத போதகரின் கருத்து தொடர்பில் உத்தரவிட்ட ஜனாதிபதி!

3 years ago
in முக்கிய செய்திகள்

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகர், அதிபர் செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்கவிடம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அதிபர் தெரிவித்தார்.

இதன்படி, போதகரின் கருத்து தொடர்பில் அதிபர் வழங்கிய உத்தரவுக்கமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் கூறிய கருத்து தொடர்பான காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் அங்கு வெளியிட்ட கருத்துக்கள் புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுந்தன.

ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன இன்று (15) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

மதப்போராட்டம் ஏற்படுவதற்கு முன்னர் இந்த போதகரை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்த இவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அந்த வீடியோவில், “ஞானம் பெற உங்களுக்கு ஒளி தேவை. புத்தர் என்ற பெயரே அறிவொளி பெற்றவர் என்று பொருள். எனவே எது பெரியது. ஒளி அல்லது ஞானம்? இயேசு நானே உலகத்தின் ஒளி என்று கூறினார்.

இயேசு நான் என்று சொல்லவில்லை. இயேசு வேறு. ஒளியில் இருந்து வந்தவர், இயேசு நானே;ஒளி என்றார், புத்தர் ஒளியைத் தேடிக்கொண்டிருந்தார்.புத்தர் உண்மையில் இயேசுவைத் தான் தேடிக்கொண்டிருந்தார். இதனால்தான் ஒவ்வொரு பௌத்தருக்கும் இயேசு தேவை” என்று ஜெரோம் கூறியிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
தமிழீழத்தின் இறுதிக்கட்ட ஆயுதப்போர்;முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரை வழங்கப்போகும் ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர்!

தமிழீழத்தின் இறுதிக்கட்ட ஆயுதப்போர்;முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரை வழங்கப்போகும் ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு