முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப் பெண் ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகி உள்ளது.
அப் பெண் ஊழியர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வேளை சப்பாத்து அணிந்த முகம்கள் இறுக்க கட்டப்பட்ட இரண்டு நபர்கள் குறித்த பெண்ணினை காட்டிற்குள் கடத்திச் சென்று துஸ்பிரயோக முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இருவரின் பிடியில் இருந்து பெண் தப்பித்து வீதிக்கு வந்து அங்கு பணியாற்றும் ஏனையவர்களை அழைத்துள்ளார்.