பாம்புகளை பிடிக்கப்பட்டு அவற்றை கையாளும் விதம் பற்றிய செயலமர்வு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் பொலிஸாருக்கு முன்னெடுக்கப்பட்டது.
கருவலகஸ்வெவ பொலிஸ் பரிசோதகர் திரு.சுஜீவ அலவத்த அழைப்பின் பேரில் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கருவலகஸ்வெவ பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கையில் வாழும் கொடிய விஷமுல்ல, சிரிய விஷமுல்ல மற்றும் விஷமற்ற பாம்புகள் பற்றிய பயிற்சி அமர்வை நடத்தினர்.
குறித்த பயிற்சி செயலமர்வு கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த அமர்வு கணனி மூலம் திரையில் கான்பிக்கப்பட்டது. பின்னர், பல விஷம் மற்றும் விஷமற்ற பாம்புகள் பிடிக்கப்பட்டு, அவற்றைக் கையாளும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.