வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர்சிலையை திருடியதாகக் கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய் துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில் கொண்டு செல் லும்போது வான் சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்ப டைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார். திருடப்பட்ட சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.