Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் டிக்டொக்கு தடை!

அமெரிக்காவில் டிக்டொக்கு தடை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் டிக்டொக்கை (TikTok) தடை செய்யக்கூடிய சர்ச்சைக்குரிய முக்கிய யோசனைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

டிக்டொக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸிற்கு (ByteDance) அதன் பங்குகளை விற்க ஒன்பது மாத அவகாசத்தை அளித்துள்ளதுடன், அமெரிக்காவில் அதன் பயன்பாட்டை தடுக்கும் வழியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த யோசனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் (Joe Biden) ஒப்படைக்கப்படவுள்ளதுடன் ஜனாதிபதி கையெழுத்திட்டவுடன் அது சட்டமாக்கப்படும் நிலையில், பைட் டான்ஸ் கட்டாய விற்பனையை முடிக்க சீன அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

எனினும் பீஜிங் இதனை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது. எனவே இந்த செயல்முறை பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உக்ரைன், இஸ்ரேல், தாய்வான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற அமெரிக்க பங்காளிகளுக்கு இராணுவ உதவியை உள்ளடக்கிய நான்கு யோசனை தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு 79 செனட்டர்கள் ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றைக் கட்டுப்படுத்த, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பல ஆண்டுகளாக நாங்கள் கோரியிருந்தோம். ஏனெனில் அது ஆபத்தானது என்று புலனாய்வுக் குழுவின் உயர்மட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் மார்கோ ரூபியோ ( Marco Rubio) கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து டிக்டொக் உடனடியாக பதிலளிக்கவில்லை. எனினும் கடந்த வாரம், அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், இந்த யோசனை 170 மில்லியன் அமெரிக்கர்களின் பேச்சு சுதந்திரத்தையும் ஏழு மில்லியன் வணிகங்களை அழிக்கும்.

மேலும், அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 24 பில்லியன் டொலர் பங்களிக்கும் தளத்தை மூடும் என்றும் கூறியுள்ளது.

டிக்டொக்கின் தலைமை நிர்வாகி ஷௌ ஜி செவ் (Shou Zi Chew), தனது நிறுவனம் சட்டப்பூர்வ உரிமைகளை பயன்படுத்தி தளத்தை பாதுகாப்பது உட்பட அனைத்தையும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க ஈத் கொண்டாட்டம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க ஈத் கொண்டாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு