முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தனது பாவங்களை கழுவிக் கொள்ளவே புத்தகம் எழுதினாரென நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம்(Kabir Hashim) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றில் இன்று(24) உரையாற்றிய போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பீதியை ஏற்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஆட்சியை கைப்பற்றினார்.
ஆட்சியை கைப்பற்றிய அவர் முதலில் சிங்கள பௌத்தர்களின் வயிற்றில் அடித்தார்.
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து விவாதம் நடத்துவதில் பயனில்லை. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டும்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச வரலாற்றை கற்றுக்கொள்வதுடன் முஸ்லிம்கள் சிங்கள அரசர்களின் காலத்திலிருந்தே எவரையும் காட்டிக் கொடுத்தது கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.