முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உள்நாட்டு விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை சிறிலங்கா விமானப்படை தகவல் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி கூட வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறிய செயல் என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் ஆணையம் விமானப்படை கொமாண்டிங் அதிகாரி குரூப் கப்டன் எம். ஜே. சந்திரேஸ்கருக்கு இது தொடர்பான தகவலை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச எத்தனை தடவைகள் உள்நாட்டு விமான சேவைகளுக்கு விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினார் என்பதும் அதற்கான செலவுகள் குறித்த தகவல்களை மார்ச் 27 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் பிரஜை ஒருவர் கோரியிருந்தார்.