யாழ்ப்பாணம் பிரதேச இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்த பாரியளவிலான கடத்தல்காரர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் நேற்றுமுன்தினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸ் எல்லைக்குட்பட்ட யாழ்ப்பாணம், கஸ்தூரியர் வீதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தகவலின்படி, உள்ளூர் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக 1,400 தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த யாழ்ப்பாணம், கொக்குவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் ஏற்கெனவே இரண்டு முறை போதை மத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். ஒரு முறை 2000 இற்கும் அதிக போதை மாத்திரைகளுடனும், மற்றொரு முறை 5000 போதை மாத்திரைகளுடனும் கைது செய்யப்பட்டிருந்தார்.