யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் சுவிட்ஸர்லாந்து நாட்டின் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று வருகின்றார்.
யோகேஸ்வரன் கரிசன் என்ற இளைஞர், தனது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள நிலையில் அந்நாட்டு இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கரிசன் 2003 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் பிறந்துள்ளார். அவரின் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துச் சென்று அங்கு குடியேறியுள்ளனர்.
தனது நாட்டு இளைஞர், யுவதிகள் கட்டாயம் ஒரு வருடம் இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்ற சட்டத்தை சுவிஸ் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இராணுவத்தில் இணையாதவர்கள் சிவில் சேவையில் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகள் யுத்தம் மற்றும் அவசரகாலத்தின் போது மீளவும் இராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.