மட்டக்களப்பில் தற்போது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து காணொளியொன்று பகிரப்பட்டு வருகிறது.
அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் முன்னாள் கணித பாட ஆசிரியர் என்பதுடன் 2018 ஆம் ஆண்டு பரீட்சை வினாத்தாள் வெளியான குற்றச்சாட்டின் கீழ் இவர் மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டவர் என அறிய முடிகிறது. தற்பொழுது குறித்த ஆசிரியர் மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியிலேயே கடமையாற்றுகிறார் என தெரியவருகிறது.
இது நீண்ட நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.