இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் சுமார் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் பல்வேறு காரணிகள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நோய் தவிர்க்கப்பட வேண்டும்.
குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரகத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாக சர்க்கரை நோய் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நாளில் 3.5 லீற்றர் தண்ணீர் பருகுதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடலாமெனவும் அவர் தெரிவித்தார்.