கந்தளாய் நகரில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் 20 மூடை அரிசியை திருடிய இளம் தம்பதியரை கந்தளாய் பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்குவதற்காக 10 கிலோ அரிசி கொண்ட 24 மூடைகள் வைக்கப்பட்டிருந்தது 27ஆம் திகதி அலுவலகத்தை திறந்து பார்த்தபோது, அரிசி மூட்டைகள் கையிருப்பு குறைந்ததையறிந்த கிராம அலுவலர் பிரதேச செயலாளரிடம் தெரிவித்து கந்தலே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அரிசி வைக்கப்பட்டிருந்த இடத்திலுள்ள ஜன்னல் திறக்கப்பட்டு அரிசி திருடப்பட்டிருப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் கிராம அதிகாரி அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் 24 மற்றும் 22 வயதுடைய தம்பதியினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான தம்பதியருக்கு ஒரு குழந்தையும் உள்ளதுடன், தம்பதியினர் இன்று (29) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் அகில கருணாரத்னவின் பணிப்புரையினால் இந்த திருட்டு தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.