இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் பயணித்த நான்கு கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த எம்.எஸ்.சி ஓரியன் என்ற கொள்கலன் கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/image-1159.png)
பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலுடன் தொடர்பில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சைக்லேட்ஸ் என்ற வணிகக் கப்பலையும், செங்கடலில் பயணித்த இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்களையும் தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, அண்மையில் செங்கடலில் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.