இலங்கை மக்கள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக தேபா மண்டபத்தில் இன்று (19.05.2023) காலை 10.30 மணியளவில் விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண மின்சார பாவனையாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவையொன்று ஒழுங்கு படுத்தப்படவுள்ளமை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மின்சார பாவனையாளர் பிரச்சனைகளான, மின்சார கணக்கின் பெயர் மற்றும் முகவரி மாற்றல், மீற்றர், மின்கம்பங்கள் மற்றும் மின் மார்க்கம், மரக்கிளைகளை வெட்டுதல், புதிய மின் இணைப்பு, மின்னோட்டம், அறவீட்டு முறையை மாற்றுதல், மின் பட்டியல், மின்சார தடைகள் போன்றவற்றிற்கு தீர்வு மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்டுகிறது.
அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் 09.06.2023 திகதிக்கு முன்னர் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ அல்லது WhatsApp அல்லது குறுந்தகவல் (SMS) சேவை மூலமோ தெரியப்படுத்தலாம்.
மேலும் இந்நடமாடும் சேவை நடைபெறும் இடம், தினம், திகதி பின்னர் அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொது மக்களின் மின்சார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அது சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் கொண்டு
வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 7 பிரதேச செயலகங்களிலிருந்து பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தது.
மின்சார பிரச்சனைகளை சமர்ப்பிப்பதற்கு மற்றும் வருகையை உறுதிப்படுத்துவதற்கு 0777174466 / 0775687387 (ரஹான்)தொடர்பு கொள்ளவும்.