மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 92 ரக ஒக்ரைன்பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைந்து புதிய விலை 368 ரூபாவாகும். அதேபோன்று 95 ரக ஒக்ரைன்பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவாக குறைந்து அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் குறைந்து அதன் புதிய விலை 333 ரூபாவாகும்.லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 09 ரூபாவால் குறைந்து அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் 30 ரூபாவால் குறைந்து அதன் புதிய விலை 215 ரூபாவாகும்.