Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் 600 குழந்தைகளுக்கு தந்தையாகிய 3 ஆண்கள்; அதிர்ச்சி தகவல்!

கனடாவில் 600 குழந்தைகளுக்கு தந்தையாகிய 3 ஆண்கள்; அதிர்ச்சி தகவல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாடுகளில், ஒரு ஆண், இத்தனை முறை மட்டுமே உயிரணு தானம் செய்யலாம் என விதிமுறைகள் உள்ளன. அப்படியிருந்தும், விதிகளை மீறி பல பிள்ளைகளுக்கு தந்தைகளான ஆண்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், கனடாவிலோ, அப்படி நெறிமுறைகள் எதுவும் இல்லை. ஆக, கனடாவின் கியூபெக் மாகாணத்தில், இணையம் வாயிலாக உயிரணு தானம் பெற்று குழந்தை பெற்ற நூற்றுக்கணக்கான தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்த விடயம் தொடர்பில் அமைப்பொன்று விசாரணை மேற்கொள்ள, மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த 600 பிள்ளைகளுக்கும் உயிரணு தானம் செய்தது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள்.

வேறுவகையில் கூறினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள 600க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தைகளாகியுள்ளார்கள்.

இன்னொரு கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி என்னவென்றால், உயிரணு தானம் செய்தவர்களில், இரண்டு பேருக்கு, கல்லீரலை பாதிக்கும் அரிய வகை மரபியல் நோய் ஒன்று உள்ளது என்பதுதான். ஆக, அவர்கள் உயிரணு தானம் கொடுத்ததன் மூலம் பிறக்கும் அடுத்த தலைமுறைக்கும் அந்த அரிய நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
அமைச்சரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 30 கோடி ரூபா பணம் பறிமுதல்!

அமைச்சரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 30 கோடி ரூபா பணம் பறிமுதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு