Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடா வழங்கப்போகும் சூப்பர் விசா!

கனடா வழங்கப்போகும் சூப்பர் விசா!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கோர் மகிழ்ச்சியான செய்தி. மே மாதம் 21ஆம் திகதி முதல், கனடா Super Visa ஒன்றை இவர்களுக்காக வழங்க தயாராகிவருகிறது.

2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ஸ்பான்சர் செய்ய விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்த 35,700 ஸ்பான்சர்களுக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அழைப்பிதழ்களை அனுப்புவதை நீட்டிக்க உள்ளது. ஆகவே, ஏற்கனவே 2020ஆம் ஆண்டு விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தவர்கள், தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ஸ்பான்சர் செய்ய விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், சூப்பர் விசாவைப் பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது.

இந்த சூப்பர் விசா, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கிறது, மேலும், உங்கள் இருப்பை கனடாவில் இருக்கும்போது நீட்டிக்கவும் முடியும்.

சூப்பர் விசாவிற்குத் தகுதிபெற, அவர்களுக்கு ஸ்பான்சர் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவராக இருக்கவேண்டியது அவசியம்.

இதனால் ஸ்பான்சர் செய்வோர், தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர் அல்லது தத்தெடுத்த பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்யமுடியும். அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பணம் தங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

ஸ்பான்சர் செய்யப்படும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி முறையான, செல்லுபடியாகும் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
Next Post
மக்களை பீதிக்குளாக்கிய சமூக வலைத்தளங்களும்-ஊடகங்களும்!

மக்களை பீதிக்குளாக்கிய சமூக வலைத்தளங்களும்-ஊடகங்களும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு