Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியர்களின் கவனயீனம்; நோய் நிர்ணய அட்டையை தர மறுத்த நிர்வாகம்!

வைத்தியர்களின் கவனயீனம்; நோய் நிர்ணய அட்டையை தர மறுத்த நிர்வாகம்!

2 years ago
in முக்கிய செய்திகள்

கிளிநொச்சி-பளை வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மழையில் நனைந்தமையால் காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு நோய்க்காக வைத்தியசாலை சென்ற குறித்த பெண் இன்று பல நோய்களில் அவதியுறுவதாக அவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நான் கடந்த மாதம் மழையில் நனைந்ததால், காய்ச்சல், சளியில் பாதிக்கப்பட்டேன். இதனால் என்னால் சரியாக மூச்சு விட முடியவில்லை.

நான் சாப்பாடு கடை ஒன்றை நடத்தி வருவதுடன், சுமார் 50 பேரிற்கு சமைத்து கொடுத்து வருகின்றேன். எனவே சளி, இருமலுடன் வேலை செய்ய முடியாது.

இதனால் பளை வைத்தியசாலைக்கு சென்று காய்ச்சலுக்கு மருந்து எடுத்தேன். அவர்கள் ஒரு மாத்திரை கொடுத்தார்கள். அதை 5 நாள் குடித்தேன். பின்னர் எனக்கு சாதாரண சளி, இருமல் வெகுவாக அதிகரித்து, காய்ச்சல் வந்தது. இதனால் எனக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே நான் பளை வைத்தியசாலைக்கு மீண்டும் சென்ற போது, நானே கூறினேன் மருந்து குடித்த பிறகு எனக்கு மிகவும் உடல்நிலை மோசமாகிவிட்டது என பின்னர் அவர்கள் நான் குடித்த மருந்து தேவையில்லை என குப்பையில் வீசிவிட்டு வேறு மருந்து தந்தார்கள்.

ஆனால் நான் அச்சத்தில் அந்த மருந்தை குடிக்கவில்லை. பின்னர் எனக்கு உடம்பில் வருத்தம் அதிகரிக்க யாழ்.வைத்தியசாலைக்கு சென்ற போது எனக்கான நோய் நிர்ணய அட்டையை அவர்கள் கேட்டார்கள். அதை நான் பளை வைத்தியசாலையில் கேட்ட போது. அதை எழுதி தருவதற்கு தாதியர் இல்லை என தெரிவித்தனர்.

பின்னர் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டேன்.எனது பிள்ளைகளை தனியாக விட்டு சென்றேன். எனக்கு 3 பிள்ளைகள். இதுதான் நோய் காரணமாக நான் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட முதல் சந்தர்ப்பம்.

எனக்கு எந்த நோயும் இருக்கவில்லை. இப்போது மூட்டு வாதம், புற்றுநோய் பரிசோதனை, உளநல சோதனை என பல சோதனைகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எனது உறவினரை அனுப்பி நான் மறுபடியும் நோய் நிர்ணய அட்டையை கேட்ட போது அவர்கள் தரவில்லை.

இப்போது நானே நேரில் வந்து மறுபடி கேட்கும் போது யாழ்.வைத்தியசாலைக்கு தொலைபேசியில் கதைப்பதாக கூறினார்கள். பின்னர் எனக்கு வழங்கப்படாத மருந்துகளை நோய் நிர்ணய அட்டையில் எழுதி கொடுத்தார்கள். இதனை அவதானித்து, அந்த நோய் நிர்ணய அட்டையை ஏற்க முடியாது என கூறினேன்.

இவ்வாறு நான் கேட்டதற்கு, பிரச்சினை செய்வதாக கூறி,பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனால் தான் நான் ஊடகத்தை நாடினேன்.” என கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
செய்திகள்

நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை

May 13, 2025
மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
Next Post
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை திட்டமிட்டது சிங்கள அரசியல்வாதிகளே; முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை திட்டமிட்டது சிங்கள அரசியல்வாதிகளே; முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.