டயானா கமகேவைப் (Diana Gamage) போன்று இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஓமல்பே சோபித தேரர் (omalpe sobitha Thero)தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,”உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
டயானா கமகேவைப் போன்று மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் அவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்.
இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவே கட்சித் தலைவர்கள் தமது பிரதிநிதிகளை கவனமாக தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதுமாத்திரமன்றி, இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளிலிருந்து மரியாதையுடன் உடனடியாக விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.