ஈரானின் துணை ஜனாதிபதி முகமட் மொக்பெர் ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின்றன.
ஈரானின் சட்டவிதிமுறைகளின் படி ஜனாதிபதியொருவர் உயிரிழந்து 50 நாட்களிற்குள் ஜனாதிபதி தேர்தல்இடம்பெறவேண்டும் .
1955ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி பிறந்த மொக்பெர் ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர்.
ஈரான் குறித்த அனைத்து இறுதி முடிவையும் எடுப்பவர் ஆயத்துல்லா அலி கமேனி என்பது குறிப்பிடத்தக்கது.
2021 இல் ரைசி தெரிவு செய்யப்பட்டவேளை மொக்பெர் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த ஒக்டோபரில் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டு ரஸ்ய இராணுவத்திற்கு மேலும் ஏவுகணைகள் ஆளில்லாவிமானங்களை வழங்குவதற்கு இணங்கிய ஈரானிய குழுவில் மொக்பெர் இடம்பெற்றிருந்தார்என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன.
ஆன்மீக தலைவருடன் தொடர்புபட்டமுதலீட்டு நிதியத்தின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
அணு அல்லது கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 2010 இல் ஐரோப்பிய ஒன்றியம் மொக்பெருக்கு எதிராக தடைகளை விதித்தது – பின்னர் அந்த தடைகளை நீக்கியது.