இலங்கையில் சமீப காலமாக சமூக சீர்கேடான சம்பவங்கள் ஒவ்வொருநாளும் பதிவாவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது. ஆசிரியர் மாணவிகளை கற்பழிப்பதும், சொந்த தந்தை மகளை துஸ்பிரயோகம் செய்வதும், ஐந்து வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்து கொன்று புதைப்பதும்,தாம் ஒரு பிக்குவாக இருந்து கொண்டு சிறு வயது பிக்குகளை துஸ்ப்பிரயரோகம் செய்வதும் என்று பல விடயங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வாறான சம்பவங்களை போல் மட்டக்களப்பில் மூன்று தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு பிரபல பாடசாலையில் 08 தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கர்ப்பமாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் வேறு எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் இந்த சம்பவங்களுக்கு முழுப்பொறுப்பு பெற்றோர்களே ஏற்கவேண்டிய நிலையில் உள்ளனர்.இதே போல 09 தர மாணவன் ஒருவன் 08 தர மாணவிக்கும் தாலி கட்டிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.