கம்பளையில் உள்ள பகுதியொன்றில் வெசாக் தானசாலைகளை அமைத்துவிட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புப்புரஸ்ஸ பகுதியில் திடீரென இரவு மின்சாரம் தூண்டிக்கப்பட்டதால், மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1043.png)
இந்நிலையில், தமது கடமைகளை முடித்துக் கொண்டு நேற்று(23) அதிகாலை 2.30 மணியளவில் நித்திரைக்கு சென்ற நிலையிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 40 வயது தந்தையும், 17 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
திடீரென மின்பிறப்பாக்கி இயங்காமல் போனதால் இதை பார்ப்பதற்கு அங்கு உள்ள இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இதேவேளையில் நித்திரை கொண்டு இருந்தவரின் முகத்தில் கரப்பான் பூச்சி கடிப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் அவரை தட்டி எழுப்பி உள்ளனர், ஆனால் அவர் மூச்சு பேச்சு அசைவும் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1044.png)
இருவரையும் உடனடியாக புப்புரஸ்ஸ பன்விலதென்ன கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் இருந்து வெளியேறிய காபன்மொனக்சைட் என்ற நச்சுத்தன்மையுடைய வாயுவை சுவாசித்ததனாலேயே இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.