யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெசாக்கினை முன்னிட்டு , யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள ஆரியகுளம் பகுதியில் இராணுவத்தினரால் வெசாக் அலங்காரம் மற்றும் வெளிச்சக்கூடுகள் , மின் விளக்கு அலங்காரங்கள் என்பவை செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதிகள் எவையும் மாநகர சபையிடம் பெறாமல் அடாத்தாக இராணுவத்தினர் செய்துள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாநகர சபை ஆட்சி காலத்தில் ஆரிய குளப்பகுதியில் எந்தவொரு மதம் சார்ந்த அலங்காரங்களும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக அவை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநகர சபை ஆட்சி இல்லாதவிடத்து , இராணுவத்தினர் அடாத்தாக வெசாக் அலங்காரத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.