மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நேற்று (25) கடுமையான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அதையடுத்து, இன்று (2024.05.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,
இந்த புயலானது நேற்று முன்தினம் (2024.05.24) வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்றது.
அதற்கு ‘ரீமால்’ என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில் ரீமால் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற உள்ளது.
அதையடுத்து, இன்று (2024.05.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீச கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு காணப்படுவதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடல்வாழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.