சூரிய குடும்பத்தில் உள்ள புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன், பூமி ஆகிய 07 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன.
சூரிய குடும்பத்தில் இருக்கும் 08 கோள்கள் அதனதன் சுற்றுப்பாதையில் வெவ்வேறு கால அளவுகளில் சூரியனை சுற்றிவருகிறது.
இந்த கோள்கள் அனைத்தும், ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்வது என்பது அரிதான ஒரு நிகழ்வு. அந்த வகையில் வெள்ளி கிரகத்தை தவிர மீதம் உள்ள 07 கோள்களும் நேர் கோட்டில் வரும் அரிய நிகழ்வு ஜூன் மாதம் 3ம் திகதி அதிகாலையில் வானில் நிகழவுள்ளது.
அதாவது புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன்,பூமி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன.
இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.