கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் ஹாக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியரான கனடா பிரஜாவுரிமை பெற்ற நபரை, குற்றவாளி என தெரிவித்து, இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திககதி, கனடா சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் பஸ் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஹாக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை பொலிசார் கைது செய்தனர். கைதான சந்தேகநபர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜஸ்கிரத் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜஸ்கிரத் குற்றவாளி என உறுதியானது. இதையடுத்து அவரது குடியுரிமையை இரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.