உலகில் புகைப்பழக்கம் குறைந்துவரும் நாடுகளில் இலங்கையின் நிலை சிறந்த நிலையில் காணப்பட்ட போதிலும், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் இலங்கையர்கள் புகைப்பழக்கத்துக்கு இப்போதும் அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது புகைப்பழக்கத்திலிருந்து விடுதலையாகி வரும் எமது நாட்டின் இளைஞர்களை மீண்டும் அதற்குள் ஈர்த்துக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும் குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைப்பழக்கத்திற்கு தூண்டும் வகையில் சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை புகையிலை நிறுவனம் மேற்கொள்வதாகவும் இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இளைஞர்களையும் சிறுவர்களையும் புகைப்பழக்கத்திற்கு தூண்டும் வகையில் சட்டவிரோதமான மற்றும் நெறிமுறையற்ற தந்திரோபாயங்களை புகையிலை நிறுவனம் மேற்கொள்வதாகவும் இதன் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.