களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1242.png)
குறித்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி காதொலிப்பான் (handfree) ஒன்றை காதில் அணிந்து கொண்டு ரயில் வீதியில் பயணித்ததாக ரயில் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.