கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளின் இலக்குகளில் ஒன்றான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலில் குறித்த பெண் படுகாயமடைந்திருந்தார்.

இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்திருந்தார். தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், சுமார் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் முழு உலகையுமே உலுக்கி இருந்தது. அதுமட்டுமல்லாது இன்றுவரை உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நீதியையும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.