பெல்மடுல்ல பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வீதியை விட்டு விலகிய முச்சக்கரவண்டி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1293.png)
காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பலத்த காயமடைந்த பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.