இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மின்சார சபையின் பிரதிநிதிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதனை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி இலங்கை மின்சார சபையின் இருப்புநிலைகள் ஜூன் மாத இறுதிக்குள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இதனடிப்படையில், திட்டக் கடன்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான கொடுப்பனவுகள், புதுப்பிக்கத்தக்க சப்ளையர்கள் மற்றும் வழங்குநர்கள், அரச வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள், 2023 இல் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்தல்.
மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார சபையின் திட்டக் கடன்கள் தொடர்பாக உலக வங்கி நிபுணர்கள் இலங்கை மின்சார சபை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பொருத்தமான மாற்று வழிகளை இனங்கண்டதன் பின்னர், இலங்கை மின்சார சபையின் இருப்புநிலை மறுசீரமைப்புத் திட்டங்கள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன.