நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்றுமுன்தினம் (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.