Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறையில் வாள்வெட்டு; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

அம்பாறையில் வாள்வெட்டு; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாள்வெட்டுக் குழுவொன்று வீடு ஒன்றில் நுழைந்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வீட்டையும் சேதமாக்கியதோடு, வீதியில் சென்றவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு குழுவினருக்கும் வாச்சிக்குடா பிரதேசத்தைச் இளைஞர் ஒருவருக்கும் இடையே மரண வீடு ஒன்றில் வாய்த்தர்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக குறித்த இளைஞனை பழிவாங்குவதற்காக சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் மோட்டர் சைக்கிள்களில் வாள்களுடன் அவரை தேடி சென்ற நிலையில், அவர் அங்கு இல்லாத நிலையில், அந்த பகுதியில் வீதியில் வந்த அந்த இளைஞரின் நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி அவரது சகோதரியின் வீட்டினுள் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து அவரை துரத்திச் சென்ற வாள் வெட்டுக்குழு அவரின் சகோதரியின் வீட்டின் பொருட்களை உடைத்து அந்த இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இதனை தடுக்க சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தினர்.

அதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் அராஜகத்தையடுத்து அங்கு சென்றவர்கள் வீதியால் சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதில் 7 பேர் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இந்த தாக்குதலை மேற்கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்ட வாள்வெட்டுக் குழு அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தொடர்சியாக இந்த பிரதேசத்தில் இடம்பெறும் ஆலய உற்சவங்கள் விளையாட்டு போட்டிகள் போன்ற பொது நிகழ்வுகளில் மதுபோதையில் சென்று அராஜகத்தில் ஈடுபட்டு ஒலிவாங்கிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாள்வெட்டுக் குழுவின் தொடர்சியான அராஜகத்தினால் பாடசாலை சிறுவர்கள் தொடக்கம் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவருவதாகவும் இவர்களுக்கு எதிராக பொலிசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது அசமந்த போக்கில் இருந்து வருவதாகவும் பிரதேச புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள், ஆலய நிர்வாகங்கள் கடும் விசனங்களை முன்வைத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
Next Post
படகு விபத்தில் 8 பேர் பலி!

படகு விபத்தில் 8 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.