Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

1 hour ago
in உலக செய்திகள், செய்திகள்

உக்ரைன் மீதான போரைக் கருத்திற்கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தைப் பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (18) கையெழுத்திட்டுள்ளார்.

இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகளிலிருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பெருமளவில் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை தீர்வை வரிகளை விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குகிறது.

இது ரஷ்யாவின் போர் வருவாயைத் துண்டிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதோடு, சீனா மற்றும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும். குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை இச்சட்டமூலத்தை 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.

ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நபர்களை இலக்கு வைப்பதுடன், ஈரானுடன் தொடர்புடைய பொருளாதாரத் தடைகளையும் இச்சட்டம் விரிவுபடுத்துகிறது.

இருப்பினும், வரிகளை விதிக்கும் வரம்பற்ற அதிகாரம் ட்ரம்பிற்கு வழங்கப்படுவதை எதிர்த்து சில ஜனநாயகக் கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் உக்ரைனை ஆதரித்தாலும், வர்த்தக ரீதியான முழு அதிகாரத்தையும் ட்ரம்பிற்கு வழங்குவதை எதிர்க்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸின் இந்நடவடிக்கை ஒரு நல்ல குறியீடு எனக் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, அமெரிக்க சட்டமியற்றுபவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!

September 19, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு