இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை தொடர்பிலான விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இரண்டு இலங்கை பிரஜைகளையும் கடவுச்சீட்டுகளை வழங்கிய இந்திய முகவர் ஒருவரையும் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியா தர்மலிங்கத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த வருணியா திருவாணவுக்கரசு மற்றும் சஞ்சிகா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
“பிரியா ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு, 21 இலங்கைப் பிரஜைகளுக்கு கடவுச்சீட்டு முகவர்களுடன் ஒத்துழைத்து இந்திய கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு வசதி செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் செயற்பட தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 16 முகவர்கள், ஆறு பொலிஸார், கடவுச்சீட்டு வழங்கும் திணைக்கள ஊழியர் மற்றும் மூன்று இலங்கையர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 108 இந்திய கடவுச்சீட்டுகள், 33 கையடக்க தொலைபேசிகள், ஐந்து மடிக்கணினிகள் மற்றும் 82 இரப்பர் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோசடிக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கும், தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்வதற்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.