பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் ஜூன் 27ஆம் திகதியன்று ஏலம் விடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
1981 இல் அப்போதைய இளவரசர் சார்லஸுடன் டயானாவின் திருமணத்திற்குப் பிறகு இளவரசி மற்றும் அவரது முன்னாள் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இடையிலான கடிதங்கள் இதில் அடங்கும்.
இதில் 1981-1985 இல் பரிமாறப்பட்ட 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
மேலும், பெவர்லி ஹில்ஸில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்படவுள்ளதுடன், இதன் மதிப்பு லட்சக்கணக்கான டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கடிதங்கள், இளவரசி டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
இந்த கடிதங்களிலிருந்து அவரை பற்றிய சுவாரஸ்யதான தகவல்கள் கிடைக்கபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மன்னர் சார்லஸிடம் இருந்து 1996 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற அவர்,1997 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.