நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மரங்கள் தொடர்பான விபரங்களை தெரியப்படுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, பொதுப்போக்குவரத்து பாதைகள், பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் உயிராபத்து விளைவிக்கக்கூடிய முழுமையாக அல்லது பகுதியளவில் அகற்ற வேண்டிய மரங்கள் தொடர்பான விபரங்களுடன் 06.06.2024ஆம் திகதி பி.ப 3.45 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த புகைப்படத்துடன் கூடிய விபரங்களினை மென்பிரதியாக jaffna@dmc.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 06.06.2024 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதய தென்மேல் பருவப் பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் யாழ் மாவட்டத்திலும் உணரப்படுகின்றமையினாலேயே குறித்த முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.