9-வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (03) இடம்பெற்ற 4வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதின.
இந்த போட்டயில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பெதும் நிசாங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெதும் நிசாங்க 3 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய இலங்கை வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் கமிந்து மெண்டிஸ் 11 ஓட்டங்கள், வனிந்து ஹசரங்க 0 ஓட்டம், சதீர சமரவிக்ரம 0 ஓட்டம், சரித் அசலங்க 6 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அனுபவ வீரர்களாக ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனக ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷனக 9 ஓட்டங்களிலும், மேத்யூஸ் 16 ஓட்டங்களிலுமு் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மகேஷ் தீக்சன மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 78 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிற்ங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிப்பெற்றது.