அண்மையில் டுபாயிலிருந்து தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நேர்காணலின் போது இலங்கையிலுள்ள பொதுமக்கள் உட்பட 90 வீதமானவர்கள் கள்வர்களே என கூறிய கருத்து எல்லாத்தரப்பினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இவர் அண்மையில் சட்ட விரோத கடத்தலில் கைது செய்யப்பட்டிருந்த நிகழ்வை தொடர்புபடுத்தி பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.
தான் செய்த சட்ட விரோத நடவடிக்கையின் மூலம் தானும் ஒரு கள்வர் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றே கொள்ளவேண்டியிருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொது மக்களை தொடர்பு படுத்தி அவர் கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.