மத்திய காசாவில் உள்ள ஐ.நா சபையின் பாடசாலையின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலை இஸ்ரேல் நேற்று (06) அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தஞ்சமடைந்திருந்த ஐ.நா பாடசாலை மீது மேற்கொண்டுள்ளது.
நுசெய்ரட் அகதிமுகாமில் உள்ள குறித்த பாடசாலையின் மேல்தளத்தில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகள் மீதே இஸ்ரேலிய விமானங்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இதன்போது, பலர் காயமடைந்துள்ளதுடன் 27 இற்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஹமாஸின் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியை குறி வைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அந்த பகுதியில் ஹமாஸின் இராணுவ முகாம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுவதை ஹமாஸ் மறுத்துள்ளதுடன் இஸ்ரேலிய படையினர் இடம்பெயர்ந்த மக்களிற்கு எதிராக தாங்கள் மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற போரை நியாயப்படுத்த கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.