ஒடிசா புகையிரத விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று புகையிரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.