கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்களின் ஆதரவு பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கனேடிய பிரதமர் லிபரல் கட்சியின் தலைவராக செயற்படவும் தகுதியற்றவர் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பினையும் வேறு ஒருவர் ஏற்றுக்கொள்வது பொருத்தமானது எனவும் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் எதிர்கால அரசியல் கேள்விக் குறியாக மாறியுள்ளமை வெளிப்படையாகியுள்ளது.
அத்துடன், வெறும் 17 வீதமானவர்கள் மட்டுமே ட்ரூடோ தொடர்ந்தும் தலைமைப் பதவியில் நீடிக்க வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.