மலாவியின் துணை அதிபர் சௌலோஸ் சிலிமாமற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர், அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்றையதினம்(11) அங்கு துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
சிலிமாவும் மற்ற பயணிகளும் நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவர்களது விமானம் ராடாரில் இருந்து கீழே விழுந்துள்ளது.
தலைநகருக்கு வடக்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ள Mzuzu விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியவில்லை என்றும், விமானம் காணாமல் போனதும் லிலாங்வேக்குத் திரும்பும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.